tamilnadu

img

சவால்களை எதிர் கொள்ள காஞ்சியில் கூடுகிறது சிஐடியு மாநாடு-வி.குமார்

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் 14வது தமிழ் மாநில மாநாடு 2019-செப்டம்பர் 19முதல் 22வரை உரிமைப்போராட்டம் வலுவாக நடை பெற்றுவருகிற காஞ்சிபுரத்தில் கம்பீரமாக நடைபெற வுள்ளது. 22அன்று மாலை பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் மிக பிரம்மாண்டமான செங்கொடி அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. மாநாட்டையொட்டி தூத்துக்குடியில் இருந்து கொடி-கொடிமரம், மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.சுப்பிரமணியம், ஆர்.ரசல் தலைமையில் செப்டம்பர் 16 முதல் 18வரை 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு 19ஆம் தேதி காலை காஞ்சிபுரம் வந்தடைகிறது. தியாகிகள் ஜோதி   சென்னையில் தோழர்.வி.பி.சிந்தன் நினைவிடத்தில் இருந்து  மாநில நிர்வாகிகள் கே.விஜயன், இ.பொன்முடி, சி.திருவேட்டை, எஸ்.கே.மகேந்திரன் தலை மையில் கொண்டுவரப்படுகிறது. இக்குழு நான்கு மாவட்டங்க ளில் பிரச்சாரம் மேற்கொண்டு 19 காலை காஞ்சிபுரம் வந்தடையும். 13வது மாநில மாநாடு 2016ல் தூத்துக்குடியில் நடந்தது. 

போராட்டங்களும்  கிளர்ச்சிகளும்
தூத்துக்குடி மாநாட்டு அறைகூவலுக்கு ஏற்ப 2017 ஏப்ரல் 4 அன்று சென்னை கோட்டை முற்றுகையானது மாநிலம் முழுவதும் இருந்து 50ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற போராட்டமாக, அனைத்து தொழிற்சங்கத்தாலும் பாராட்டக்கூடிய-பேசக்கூடிய போராட்டமாக அமைந்தது. 2018 செப்டம்பர் 5 தில்லி அணிவகுப்பு, நவம்பர் 9-11 மகாமுற்றுகை இயக்கம், ஆகஸ்ட்-9 சிறைநிரப்பும் போராட்டம், ஆகஸ்ட்-14 விடியலை நோக்கி இந்தியா போன்ற சுயேட்சையான எழுச்சிமிகு இயக்கங்களும்; 2019 ஜனவரி 8-9, 48மணி நேர வேலை நிறுத்தம் போன்ற கூட்டுநடவடிக்கைகளில் முன்னிலைப்பங்கு வகித்தது; துறைவாரியான போராட்டங்கள்; சேலம் உருக்காலையை பாதுகாக்க நடைபெறுகின்ற தொடர்போராட்டம்; மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து ஆட்டோ, அரசு போக்கு வரத்து, சாலை போக்குவரத்து, பள்ளி வாகன உரிமையா ளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி, உதிரிபாகங்கள் விற்பனை செய்வோர் என கூட்டாக நடத்திய வேலை நிறுத்தங்கள்; உள்ளாட்சியில்-நகராட்சியில்-சென்னை குடிநீர் வாரி யத்தில் நடத்திய காத்திருப்பு போராட்டம்; நவீன தொழிற்சாலைகளான யமஹா, என்பீல்டு, அசாகி, சோவல் இந்தியா, கெம்பிளாஸ்ட் போன்றவற்றில் நடத்திய கிளர்ச்சி கள்; இதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடத்திய ஆதரவு இயக்கங்கள்; முறைசாரா தொழில்களான கட்டுமானம், கைத்தறி, விசைத்தறி, பீடி, பட்டாசு, சுமை, உப்பு, மீன்பிடி போன்ற அரங்க வாரியான கிளர்ச்சிகள் என கடந்த மூன்று ஆண்டுகாலமாக தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாற்றியது சிஐடியு. இதனால் சில தொழிற்சாலைகளிலும், அரசு துறைகளிலும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது.

சிஐடியு தமிழ் மாநில மாநாடுகள்-விபரம்


மதுரை - முதல் சிஐடியு மாநில மாநாடு- 1971 ஜூலை16-18
சென்னை- இரண்டாவது மாநில மாநாடு 1973 டிசம்பர் 20-23
திருச்சி - மூன்றாவது மாநில மாநாடு 1980 செப்டம்பர் 18-21
கோவை- நான்காவது மாநில மாநாடு  1983 டிசம்பர் 28- 31
நாகர்கோவில் 5வது மாநில மாநாடு 1989 செப்டம்பர் 21- 23
சேலம் - 6வது மாநில மாநாடு 1993 ஏப்ரல் 21-24
சென்னை- 7வது மாநில மாநாடு 1997-மார்ச் 6-8
மதுரை - 8வது மாநில மாநாடு 2000-செப்-27-30
திருநெல்வேலி - 9வது மாநில மாநாடு 2003- ஆகஸ்ட் 7-10
திருப்பூர் - 10வது மாநில மாநாடு 2006 டிசம்பர் 17-20
கடலூர் 11வது மாநில மாநாடு 2010 ஜனவரி 4-6
திருச்சி 12வது மாநில மாநாடு 2013 பிப் 1-4
தூத்துக்குடி 13வது மாநில மாநாடு 2016 செப்-9-12

தற்போதைய சூழல்
17வது மக்களவைத் தேர்தலில் மதவெறியையும், தேசிய வெறியையும் கிளப்பி மக்களை பிளவுபடுத்தியதன் மூலமும், ரூ. 27 ஆயிரம் கோடி செலவு செய்து, கார்ப்ப ரேட் ஊடகங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவி யுடன் இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்ட மோடி அரசு, ‘வளர்ச்சி வளர்ச்சி’ என வாய் கூசாமல் பொய் சொல்லிக்கொண்டே நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது. நவீன தாராளமயக் கொள்கை தோல்வியுற்ற நிலை யிலும் புதிய அரசு இதை வேகமாக அமலாக்கத் துடிக்கிறது. தேர்தலுக்குப்பின் ஆட்சி அமைத்த பாஜக 100 நாள் திட்டத்தை அறிவித்தது. கடந்த ஆட்சியின் போது தொழிலா ளர்கள் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டங்கள் அனைத்தையும் உடனே நிறைவேற்றுவதுதான் இன்றைய அரசின் முதல் கடமை என பிரகடனம் செய்தது.

தொழிலாளர் நலச் சட்டம் திருத்தம்
முதல் நாடாளுமன்ற தொடரிலேயே 36க்கும் மேற்பட்ட மசோதாக்களை முன்மொழிந்து சட்டங்களாக நிறைவேற்றி னார்கள். குறிப்பாக 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1936 சம்பளப்பட்டுவாடா சட்டம், 1948 குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1965 போனஸ் சட்டம், 1976 சமவேலைக்கு சமஊதியம் சட்டம் ஆகிய 4 சட்டங்களை சம்பளத் தொகுப்பாக நிறை வேற்றிவிட்டனர். இதுபோன்று புதிய மோட்டார் வாகனச்  சட்ட திருத்தத்தை  நிறைவேற்றி உள்ளனர்.

மக்கள் விரோத பட்ஜெட்
கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வேலை இன்மை பெருகி 7.4 சதமாக அதிகரித்துள்ளது. மந்தமான பொருளாதார நிலை உள்ளபோது வேலை வாய்ப்பை உரு வாக்க அரசு முன்வராதபோது மேலும் மேலும் சிக்கல்கள் அதி கரிக்கின்றன. இதற்கு பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை. மத்திய அரசின் நடப்பு பட்ஜெட்டில் ரூ.1.05 லட்சம் கோடிக்கு பொதுத்துறை பங்குகளை விற்று வருவாய் உருவாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அரசுத் துறையாக உள்ள ரயில்வே, பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறைகளை கார்ப்பரேட்டுகளாக பிரிப்பதும் பின் தனியார் கம்பெனிகளிடம் கைமாற்றுவதும் அரசின் திட்டமாக உள்ளது. சேலம் உருக்காலை உள்ளிட்ட ஆலைகளையும், அவற்றின் சொத்துக்களையும் தனியாரிடம் அப்படியே தாரைவார்க்க மத்திய அரசு துடிக்கிறது. அனைத்து பொதுத்துறைகளிலும் 51 சதமானம் பங்குகள் அரசிடம் இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது 49 சதமானத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான அனுமதியாகவே கருதவேண்டி யுள்ளது.

பொருளாதார வீழ்ச்சி
பொருளாதார மந்தம் காரணமாக அனைத்துத் துறை களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 6.83 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்டு விட்டது.தொலைத்தொடர்பு நிறுவனங்களான டாடா டொகோமோ, ஏர்செல் ஆகியவை அழிவைச் சந்தித்துள்ளன. ரியல் எஸ்டேட் உள்பட அனைத்தும் பொருளாதார மந்தத் தால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ கத்தில் மட்டும் ஆட்டோமொபைல் துறையில் 10 லட்சத்திற் கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பல உற்பத்தி நிறுவனங்கள் வாரத்திற்கு மூன்றுநாள், நான்குநாள் முதல் இரண்டு வாரம் வரை என விடுப்பு விட்டுள்ளன. மாருதி நிறுவனத்தில் உடனடியாக 3000 ஒப்பந்த தொழி லாளர்களும் ஹோண்டா நிறுவனத்தில் 10000 தொழிலா ளர்களும் உடனடியாக வேலை இழக்கப் போவதாகவும் அந்நிறுவனங்களே அறிவித்துள்ளன. உற்பத்தியான கார்களும் இருசக்கர வாகனங்களும் விற்பனை தேக்கத் தால் ரூ.60,000 கோடிக்கு மேல் ஷோரூம்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன. கோவை, சென்னை போன்ற நகரங்களில் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் கம்பெனி களும், டயர் தொழிற்சாலைகளும் ஒப்பந்த தொழிலாளர்க ளை நிறுத்தி விட்டனர். அசோக்லேலண்டு கம்பெனியின் ஐந்து தொழிற்சாலைகளில் 10 முதல் 18 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதர நிறுவனங்களில் நிரந்தர தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் முதல் நான்கு நாட்கள் வரை விடுப்பு அறிவித்துள்ளனர்.  பார்லே நிறுவனத்தின் ரூ.5 விலையுள்ள பிஸ்கட் பாக்கெட்கூட விற்பனையாகாமல் பெருமளவு தேங்கி விட்டது. இதனால் 10000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்க ளை வேலையை விட்டு நிறுத்தப்போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளாடை விற்பனை 40 சதமானம் அளவிற்கு குறைந்துவிட்டது, இதனால் விசைத்தறி, பஞ்சாலை மற்றும் கார்மண்ட்ஸ் தொழில்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகியிருக்கின்றன. இதன்மூலம் இத்துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மோடி அரசு நிதியமைச்சகம் ரிசர்வ் வங்கியின் சேமநல நிதியில் இருந்து பணத்தை எடுக்க பெருமுயற்சி செய்தனர். இதனால் ரிசர்வ் வங்கியின் கவர்னர்கள் அஞ்சி ராஜினாமா செய்தனர். இப்போது தங்களுக்கு சாதகமான குழுவினை அமைத்து தற்போது ரூ.1.76லட்சம் கோடியினை எடுத்துள் ளது. இத்துடன், வங்கிகள் இணைப்பு மூலமும் தேசத்தின்பொ துப்பணம், கார்ப்பரேட்டுகளுக்காக சூறையாடப்படுகிறது.

தொடரும் போராட்டம்
இச்சூழலில் வங்கித்துறையில் தொடர் போராட்டங்கள், ரயில்வே துறையில் தனியார்மய எதிர்ப்பு போராட்டங்கள், பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சேலம் உருக்காலை பாதுகாப்பு போராட்டம் என தொழி லாளர்களும் ஊழியர்களும் தொடர்ந்து சோர்வின்றி கிளர்ச்சி களில் ஈடுபட்டு வருவது, தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம்தான் நாட்டை பாது காக்கமுடியும். தொழிலாளி வர்க்கம் தான் இப்பணியை செய்யமுடியும். இதற்கான திட்டமிடுதலை நாம் முன்னெ டுத்துச் செல்லவேண்டியுள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒருபகுதி என்ற வகையில் தமிழக தொழிலாளர்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் சிஐடியு மாநில மாநாடு தீர்மானிக்கும். “ஒன்றுபடு போராடு” என்ற முழக்கத்தை வலுவாக கொண்டு செல்ல காஞ்சியில் கூடுவோம்! திட்டமிடுவோம்! வெற்றி பெறுவோம்!

கட்டுரையாளர் :  மாநில துணைப் பொதுச்செயலாளர், சிஐடியு

;